சங்கரன்கோவில் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கிராம மக்கள் ஆர்வம்

சங்கரன்கோவில் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கிராம மக்கள் ஆர்வம்
X

சங்கரன்கோவில் அருகே ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட கிராம மக்கள்.

வடக்குப்புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆர்வமுடன் கொரோன தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராம மக்கள்.

காெராேனா தாெற்றை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பாெதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி சிறப்பு முகாம்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வடக்குப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அரசு ஆரம்ப சுகதார நிலைய மருத்துவர் முத்துக்குமார் கிராம மக்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் 150க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future