நிலத்தகராறில் கொலை வெறித் தாக்குதல் : போலீசார் விசாரணை

நிலத்தகராறில் கொலை வெறித் தாக்குதல் : போலீசார் விசாரணை
X
இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களின் மொபைல் போனில் எடுக்கப்பட்டதால், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதையா என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக நில தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை தங்கராசு நிலத்திற்கு வந்த மருதையாவை என்னுடைய இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி மருதையா தன் கொண்டுவந்து அரிவாளால் தங்கராசுவை வெட்டினார். இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களின் மொபைல் போனில் எடுக்கப்பட்டதால், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வெட்டுப்பட்ட தங்கராசு பலத்த காயங்களுடன் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெட்டிய மருதையாவை தேடி வருகின்றனர்.

Next Story
ai solutions for small business