சங்கரன்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி

சங்கரன்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி
X

சங்கரன்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழீழ விடுதலை போராட்ட களத்தில் வீரமரணமடைந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

சங்கரன்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழீழ விடுதலை போராட்ட களத்தில் வீரமரணமடைந்த விடுதலை புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குருவிகுளம் அருகே உள்ள கொக்கு குளத்தில் மாவீரர் நாள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குருவிகுளம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் மாவட்ட பொருளாளர் அங்கயற்கணி பாண்டி முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். இதில் தொகுதி செயலாளர் சோமசுந்தரம், செய்தி தொடர்பாளர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!