நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவில்பட்டியில் விசிக ஆலோசனை கூட்டம்
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோவில்பட்டி விடுதலை சிறுத்தை கட்சி அலுவலத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகரப்புற ஊராட்சி தேர்தல் குறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை சார்பில் கோவில்பட்டி விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், நகரச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் மாடசாமி, நகரத் துணைச் செயலாளர் பாண்டி வளவன், கலை இலக்கியப் பிரிவு மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் விஜய் அந்தோணி கலந்து கொண்டனர்.
மேலும், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்டர் மோகன், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் அன்புகரசி ராஜீவ் காந்தி, இளஞ்சிறுத்தை எழுச்சி மாவட்ட துணை அமைப்பாளர் கரிசல் சேகர், மாவட்ட செய்தி தொடர்பு மனுவேல், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் முத்துசாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாபு, நில உரிமை மாவட்ட அமைப்பாளர் மோஷன், தொகுதி செயலாளர் குமரவேல் உள்ளிட்ட கயத்தார், கழுகுமலை, விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu