வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்
X

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது அரசால் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராதாபுரம் தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் 15 முதல் 18 வயது வரையான மாணவ மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்பேரில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைவர் கிரகாம்பெல் தலைமை வகித்தார். தாளாளர் திவாகரன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் வடக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராமலிங்கம் மற்றும் மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டனர். இதில் மாணவ மாணவிகள் முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future