உவரி சுயம்புலிங்க சுவாமி மூலவர் மீது சூரிய கதிர் விழும் அபூர்வ நிகழ்வு

உவரி சுயம்புலிங்க சுவாமி மூலவர் மீது சூரிய கதிர் விழும் அபூர்வ நிகழ்வு
X

உவரி சுயம்புலிங்க சுவாமி மூலவர் மீது மார்கழி மாதம் சூரிய கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

உவரி சுயம்புலிங்க சுவாமி மூலவர்மீது மார்கழி மாதம் சூரிய கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

உவரி சுயம்புலிங்க சுவாமி மூலவர்மீது மார்கழி மாதம் சூரிய கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு.

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவஸ்தலமும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமும் ஆன உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நேற்று தொடங்கியது.

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலின் மூலவர் ஆன சுயம்புலிங்க சுவாமி மீது சூரிய கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் நடந்து வருகிறது.

நேற்று மார்கழி மாதம் பிறந்ததையொட்டி உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தனுர் மாத திருப்பள்ளிஎழுச்சி பூஜை துவங்கியது. இதனை ஒட்டி நேற்றுறு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு முப்பது மணிக்கு அபிஷேகம் 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது.

மார்கழி மாதம் காலை 6:45 மணிக்கு சூரிய கதிர்கள் மூலவரான சுயம்புலிங்க சுவாமி மீது விழும் அபூர்வ நிகழ்வு ஆண்டு தோறும் தொடர்ந்து நடந்து வருகிறது.பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த காட்சியை காண ஏராளமான பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வருகை தந்தனர். சூரிய பகவானே சிவபெருமானை பூஜிக்கும் காட்சியாக இதனை பக்தர்கள் கருதுகின்றனர். இந்த நிகழ்வு மார்கழி இருபத்தி ஒன்பதாம் தேதி வரை தினமும் காலையில் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு திருக்கோவில்களில் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் நிகழ்வு நடைபெற்று வருகிறது என்றாலும் அந்த நிகழ்வுகள் ஆண்டில் ஓரிரு நாட்கள் மட்டும் நடைபெறும். ஆனால் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் மூலவரை சூரியக்கதிர்கள் அபிஷேகம் செய்யும் அபூர்வ நிகழ்வு நடைபெற்று வருவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....