நகர்புற உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்கோவிலில் அமமுகவினர் விருப்ப மனு
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினரிடம் விருப்ப மனுக்களை டாக்டர் எஸ். அய்யாதுரைப்பண்டியன் பெற்றுக் கொண்டார்.
சங்கரன்கோவிலில் அமமுக மாவட்ட செயலாளர் அய்யாதுரைப்பண்டியன் தலைமையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினரிடம் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் வைத்து நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினரிடம் விருப்ப மனுக்களை தென்காசி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் டாக்டர் எஸ். அய்யாதுரைப்பண்டியன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணைச் செயலாளர் சுமதி கண்ணன், துணைச் செயலாளர்கள் குமரேசராஜா, எம்.கோமதி, மாவட்ட பொருளாளர் அருணகிரிசாமி, மாவட்ட கழக மகளிரணி செயலாளர் நாகலெட்சுமி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சுப்பிரமணியன் என்ற சுரேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் உதயம் பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பால் பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ரமேஷ் குமார், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, வாசு தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், மேலநீலித நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், சங்கரன்கோவில் நகர செயலாளர் எம்.எஸ்.கே. முப்பிடாதி, கடையநல்லூர் நகர செயலாளர் கோதரிஷா, செங்கோட்டை நகர செயலாளர் மாரியப்பன், அச்சன்புதூர் பேரூர் கழக செயலாளர் திருப்பதி, வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் அம்மாதாசன், வடகரை பேரூர் கழக செயலாளர் காஜா ஒலி, சங்கரன்கோவில் நகர இணைச் செயலாளர் கணகசபாபதி, களப்பாகுளம் ஊராட்சி கழகச் செயலாளர் பசும்பொன், களப்பாகுளம் கிளைச் செயலாளர் கோட்டதுரை, மாவட்ட எம்ஜிஆர் அணி இணைச்செயலாளர் மூக்கையா மற்றும் வள்ளிநாயகம், பூசைத்துரை, முத்துக்குமார், சௌந்தரபாண்டியன், கல்யாணசுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu