நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பணகுடியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:  பணகுடியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
X

வள்ளியூர் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

நகரப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுகசெயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் பணகுடியில் நடைபெற்றது

வள்ளியூர் ஒன்றியம் பணகுடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுகசெயல் வீரர்களின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதும் வரும் மார்ச் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வர இருப்பதால் தி.மு.க.மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகள் மூலம் மாவட்டம் , ஒன்றிய அளவில் செயல் வீர்கள் கூட்டம் நடத்தி வருகின்றன. அதன்படி பணகுடி தனியார் திருமண மண்டபத்தில் வள்ளியூர் தெற்கு , மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் அதிமுகசெயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அதிமுகஅமைப்பு செயலாளர் ஏ.கே. சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா கலந்து கொண்டு பேசுகையில், பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கியதில் திமுக அரசு மக்களின் கடும்கோபத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும் ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்களாகியும் தேர்தல் அறிக்கையில் கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பணகுடியில் மனோ கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தந்தது அதிமுக ஆட்சிதான்.இது போன்ற அனைத்து சாதனைகளையும் மக்களிடையே கொண்டு சென்று பணகுடி டவுன் பஞ்சாயத்து மட்டுமன்றி மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சிகளையும் கைப்பற்றும் வகையில் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றார்.

இதில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் நாராயணபெருமாள், முன்னாள் நாடாளுமன்ற மேலவை எம்.பி. செளந்தர ராஜன் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பால்துரை, ஒன்றியச் செயலாளர்கள் அழகானந்தம், செல்வராஜ் , ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல் ராஜா , பணகுடி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜி.டி.லாரன்ஸ், வள்ளியூர் நகர செயலாளர் பொன்னரசு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்