நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் தேமுதிகவினர் விருப்ப மனு வினியாேகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் தேமுதிகவினர் விருப்ப மனு வினியாேகம்
X

நகர உள்ளாட்சி தேர்தலையாெட்டி நெல்லையில் தேமுதிக கட்சி சார்பில் விருப்ப மனு வினியாேகம் நடைபெற்றது.

நகர உள்ளாட்சி தேர்தலையாெட்டி நெல்லையில் தேமுதிக கட்சி சார்பில் விருப்ப மனு வினியாேகம் நடைபெற்றது.

நகர உள்ளாட்சி தேர்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தொண்டர்களிடம் விருப்ப மனு வாங்கி வரும் வேளையில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று நெல்லை புறநகர் மாவட்டம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முதல் கட்டமாக அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகரம், மணிமுத்தாறு, கல்லிடை, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம் பேரூர் கழகம் சார்பில், விருப்ப மனுவினை மாவட்ட கழக செயலாளர் லயன் விஜி வேலாயுதத்திடமிருந்து தேமுதிக நிர்வாகிகள் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர். மேலும் தேர்தல் களத்தில் வெற்றிக்கனியை பறித்து புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம் என்று உத்வேகத்துடன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் வழக்கறிஞர் அய்யப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் லட்சுமணன் அம்பை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் நகரச் செயலாளர் விஜய் இசக்கிராஜன் பேரூர் கழக செயலாளர் அம்சத்தை அலி ராமர் சடகோபால் மற்றும் நிர்வாகிகள் நடராஜன் முருகன், அருணாச்சலம், முத்துராமன் மணிகண்டன், நாலாயிர முத்து, ஐயப்பன் இசக்கிமுத்து பிரபுராஜ் மாரியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!