நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்கோவிலில் பாமக ஆலோசனை கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்கோவிலில் பாமக ஆலோசனை கூட்டம்
X

சங்கரன்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

சங்கரன்கோவிலில் பாமக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சங்கரன் கோவில் பாமக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை தந்தோரை சங்கரன்கோவில் நகர தலைவர் வரவேற்று பேசினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ் குமார், இளைஞரணி செயலாளர் சாகுல்ஹமீது, தென்காசி மத்திய மாவட்ட துணைத்தலைவர் மகாதேவன், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், வடகரை வேம்புராஜ், தென்காசி நகர செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக மாநில இணைப்பொதுச் செயலாளர் இசக்கி படையாட்சி, மாநிலத் துணைத்தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திருவேங்கடம் நகர பாமக பொறுப்பாளர் மாரிக்கனி நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தில் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாமக சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்ய அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!