பல்கலைகழக தடகள போட்டி: வடக்கன்குளம் எஸ்.ஏ.வி சகாயதாய் கல்லூரி மாணவிகள் சாதனை

பல்கலைகழக தடகள போட்டி: வடக்கன்குளம் எஸ்.ஏ.வி சகாயதாய் கல்லூரி மாணவிகள் சாதனை
X

பல்கலைகழக தடகள போட்டிகளில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி சகாய தாய் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்.

வடக்கன்குளம் எஸ்.ஏ.வி சகாய தாய் கல்லூரி மாணவிகள் பல்கலைகழக தடகள போட்டிகளில் சாதனை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் சார்பில் 31வது ஆண்டு தடகள போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. போட்டி நடைபெற்ற நான்கு மாவட்டங்களில் 74 கல்லூரிகளிலிருந்து 1300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி சகாயத்தாய் கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி மாணவிகள் யசோதா 10,000 மீட்டர் மற்றும் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கங்களும், D. ஆன்சி பியூலா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், S. கிறிஸ்டின் ஆக்னஸ் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், வர்ஷா உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், தொடர் ஓட்டப்பந்தயத்தில் ஆன்சி பியூலா, ஆன்சிலா, வர்ஷா, கிறிஸ்டின் ஆக்னஸ் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

என்.கே. வர்ஷா ஹெப்தலான் (7வகை) போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று 3839 புள்ளிகளை பெற்று முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். இறுதியாக 6 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் பல்கலைகழக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி செயலர் ம. கிரகாம்பெல், கல்லூரி உறுப்பினர் திரு. ம. திவாகரன், முதல்வர் கிருஷ்ணவேணி, உடற்கல்வி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!