சங்கரன்கோவிலில் ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்: பாஜக வேட்பாளர் குற்றசாட்டு
சங்கரன்கோவிலில் பணபட்டுவாடாவை தடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாஜக வேட்பாளர் குற்றசாட்டு. ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த கோரிக்கை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட முப்பது வார்டு பகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி அதில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, மதிமுக போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ1500வரை பணம் கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக தேர்தல் பறக்கும்படையினர், சங்கரன்கோவில் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அதனால் நேர்மையான முறையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் ஜனநாயகம் பணத்தால் விற்பனையாகி வருகிறது. எனவே தமிழக தேர்தல் ஆணையம் உடனடியாக சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மூன்றாவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் விக்னேஷ் கோரிக்கையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu