சீரான குடிநீர் விநியோகம்: கோவில்பட்டியில் அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை நடத்தினார்.
சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக கோவில்பட்டியில் அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை நடத்தினார்.
நகராட்சி அலுவலகத்தில் கோவில்பட்டியில் சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், கோவில்பட்டி நகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். நகரில் எங்கேயாவது குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதியில் ரோடு போடாத இடங்களில் ரோடுகள் போடப்படும் என்றார் அமைச்சர் கீதாஜீவன்.
கூட்டத்தில். நகராட்சி கமிஷனர் ராஜாராம், பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன், உதவி பொறியாளர்கள் பிரதான்பாபு, சுரேஷ் மற்றும் திமுக நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர்கள் சேதுரத்தினம், தவமணி, பரமசிவம்.
மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், அவைத்தலைவர் முனியசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, ரவீந்திரன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், மூப்பன்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரீஸ்வரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன், நாகராஜ், செல்லப்பா, முன்னாள் நகர செயலாளர் சிவா, நகர வர்த்தக அணி அமைப்பாளர் துரை மற்றும் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu