இரண்டு மணி நேர பேச்சுவார்த்தை: விநாயகர் சிலையை வைத்த இந்து முன்னணியினர்
சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் முன்பு வைக்கப்பட்டடுள்ள விநாயகர் சிலை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆண்டு தோறும் நகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் முன்பு உள்ள காந்தி மண்டபத்தில் விநாயகர் சிலையை வைக்க காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதனை மீறி சிலை வைக்கப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்தனர். இதனையடுத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்தை நடத்திய காவல்துறையினர், பின்பு விநாயகர் சிலை வைக்க அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu