முப்படை தளபதி, ராணுவ அதிகாரிகள் மறைவு: அம்பை பள்ளியில் மாணவர்கள் அஞ்சலி

முப்படை தளபதி, ராணுவ அதிகாரிகள் மறைவு: அம்பை பள்ளியில் மாணவர்கள் அஞ்சலி
X

அம்பாசமுத்திரம் வேல்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மறைந்த முப்படைத்தளபதி பிபின் ராவத்தின் உருவப்படம் வரைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

அம்பாசமுத்திரம் பள்ளி மாணவர்கள் மறைந்த முப்படைத்தளபதி பிபின் ராவத்தின் உருவப்படம் வரைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேல்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மறைந்த முப்படைத்தளபதி பிபின் ராவத்தின் உருவப்படம் வரைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நேற்று முன்தினம் ஊட்டி வெலிங்க்டன் ராணுவப் பள்ளியில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவுவிழாவில் பங்கேற்க முப்படைத்தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் வந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களது உடல்கள் டில்லி கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இதையடுத்து அம்பாசமுத்திரம் வேல்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மறைந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தும் வகையில் மணலில் வண்ணப்பொடி கலந்து பிபின் ராவத் உருவம் வரைந்தும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் வீரவேல் முருகன், இயக்குநர் ராஜராஜேஷ்வரி, தலைமை ஆசிரியை அனந்த மெர்லின், ஆசிரியைகள் ஏஞ்சல், தேவி, வந்தனா, சித்ரா மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ,மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் மகாராஜா ஓவியத்தை வரைந்து இருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!