நான்குநேரி ஸ்ரீராமானுஜா பள்ளியில் மறைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி

நான்குநேரி ஸ்ரீராமானுஜா பள்ளியில் மறைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி
X

நான்குநேரி ஸ்ரீ ராமானுஜா மெட்ரிக் பள்ளியில் முப்படை தளபதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நான்குநேரியில் மறைந்த முப்படைத் தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

ஊட்டி அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் மற்றும் 12 ராணுவ உயர் அதிகாரிகளின் ஆத்மாக்களும் இறைவனது பாதத்தில் சேர்ந்திட வேண்டி நான்குநேரி வானமாமலை மடம், ஸ்ரீராமானுஜா பப்ளிக் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரட், ஸ்ரீரங்கம் ஸ்ரீ வானுமகாசல வித்யாபீடம் ஆகியவற்றின் சார்பில் நான்குநேரி ஸ்ரீ ராமானுஜா மெட்ரிக் பள்ளியில் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்விற்கு நான்குநேரி டிஎஸ்பி., ரஜத் சதுர்வேதி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, டிரஸ்ட் உறுப்பினர் ரங்கா பிரசாத், உதவி தலைமை ஆசிரியை இராமராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த முப்படைத் தளபதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு இராணுவ வீரர்களுக்கு தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ வானமாமலை மடத்தின் நிர்வாகம் செய்து இருந்தது.

Tags

Next Story
ai in future agriculture