சங்கரன்கோவில் நகராட்சி கடைகள் கட்டும் பணிக்கு பழங்குடியினர் எதிர்ப்பு
சங்கரன் கோவில் நகராட்சி சார்பில் கடைகள் கட்டும் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் சாலை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் நகராட்சி நிர்வாகம் தனக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்ட பணிகளை ஆரம்பிக்க ஜே.சி.பி. இயந்திரங்களுடன் வேலையை தொடங்கிய பொழுது அந்தப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இடம் தங்களுக்கு சொந்தமான இடம் என்றும் இந்த இடம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பதாகவும் நீதிமன்ற உத்தரவு வரும் வரை இந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் எந்தவித வேலையும் தொடங்க கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் நில அளவீட்டாளர்களின் உதவியுடன் நிலங்களை அளந்து முறையான வரையறை செய்யப்பட்ட பின் இந்த இடத்தில் கடைகள் கட்டப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பழங்குடியின மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். நகராட்சியின் சார்பிலேயே கடைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது சங்கரன்கோவில் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu