கரிவலம்வந்தநல்லூர் அருகே மது விற்பனையை தடுத்த போலீசாருக்கு மிரட்டல்: 2 பேர் கைது

கரிவலம்வந்தநல்லூர் அருகே மது விற்பனையை தடுத்த போலீசாருக்கு மிரட்டல்: 2 பேர் கைது
X
கரிவலம்வந்தநல்லூர் அருகே மது விற்பனை செய்ததை தடுத்த போலீசாருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது: 30 பாட்டில்கள் பறிமுதல்.

கரிவலம்வந்தநல்லூர் அருகே மது விற்பனை செய்ததை தடுத்த போலீசாருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது: 30 பாட்டில்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மாங்குடியில் உள்ள பெட்டிக் கடையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவலர்கள் செந்தில்குமார், முருகன் உள்ளிட்ட போலீசார் அங்குள்ள பெட்டிக் கடையை சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது கடையை நடத்தி வரும் மாங்குடி காமராஜர் காலணியை சேர்ந்த கருப்பசாமி மகன் அருணாச்சலம் (48), அவரது உறவினர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த சிவசங்கர் மகன் விஜய் (எ) விஜயகுமார்(48) ஆகியோர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்கு பதிவு செய்து அருணாச்சலம், விஜயகுமாரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 15 மதுபாட்டில்கள் வீதம் 30 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!