சிவகிரியில் தாெடர் வனவிலங்கு வேட்டை: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

சிவகிரியில் தாெடர் வனவிலங்கு வேட்டை: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
X

சிவகிரியில் தொடர் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வந்த காசிராமன்.

சிவகிரியில் தொடர் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது. வனத்துறையினர் நடவடிக்கை.

சிவகிரியில் தொடர் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வந்த காசிராமன் என்பவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை.

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து மூன்று புள்ளிமான்கள் மற்றும் ஒருகாட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்து சிறையில் அடைக்கபட்டனர். அதில் இரண்டு பேரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த ராஜபாளையம் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த காசிராமன்(44) என்பவரை கைது செய்தனர். இவர் இப்பகுதியில் தொடர் வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுபவர் என்பதால் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வனஅலுவலர் உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!