மூலிகை டீ யில் இத்தனை வகைகளா? அசத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்
கண்காட்சியில் இடம் பெற்ற 13 வகையான மூலிகை தேநீர்.
தென்காசி மாவட்டம் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக என்.ஜி.ஓ.காலனியில் அன்பழகன் தலைமையில் 13 வகையான தேநீர் தயாரித்து அதன் மருத்துவ குணங்களைப் பற்றி மக்களுக்கு விவரித்தனர் .
நித்தியகல்யாணி தேநீர் , கற்பூரவள்ளி தேநீர் , எலுமிச்சை தேநீர் , துளசி தேநீர் புதினா தேநீர் , இஞ்சி தேநீர் , வெற்றிலை தேநீர் , சங்கு பூ தேநீர் , ரோஸ் தேனீர் மல்லிகை பூ தேனீர் , காகித பூ தேனீர் , செம்பருத்தி பூ தேநீர் , முருங்கை இலை தேநீர் போன்றவற்றை தயாரித்து கண்காட்சி அமைத்தனர் என்.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பங்கேற்று பயன் பெற்றனர்.இதை மாணவிகள் நா.கீர்த்தனா,ர.கீர்த்தனா,ரா.கீர்த்திமதி,வி.ஜா.பிரியதர்ஷினி, கூ.சா. ராஜதிவ்யா, ரா.வீரலெட்சுமி, ப.விகாஷினி, மு.யோக பரமேஸ்வரி செயல் முறை விளக்கம் அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu