செல்போன்களை ஒப்டைத்த பெண்மணியின் நேர்மை

செல்போன்களை ஒப்டைத்த பெண்மணியின் நேர்மை
X
சாலையில் கண்டெடுத்த செல்போன்களை காவல்நிலையத்தில் ஒப்டைத்த பெண்மணியின் நேர்மையான செயலை பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தனது இரண்டு செல்போன்கள் தொலைந்து விட்டதாக கடந்த 30/03/2021 காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று (02/04/2021) சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கீழே கிடந்து 2 செல்போன்களை கண்டெடுத்ததாக கருவந்தாவை சேர்ந்த மாரிச்செல்வி என்ற பெண் ஊத்துமலை காவல் நிலையம் வந்து ஒப்படைத்தார்.

மாரிச்செல்வியின் இச்செயலை பாராட்டி ஊத்துமலை காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு ரூபாய் 1000 வெகுமதியாக அளித்தார். பின்பு செல்போன்களை தவறவிட்ட நபரை காவல் நிலையம் வரவழைத்து அவரிடம் தங்கள் உடமையை பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை என அறிவுரைகள் வழங்கி செல்போன்களை அவரிடம் ஒப்படைத்தார். மாரிச்செல்வியின் இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story