சங்கரன்கோவில் அருகே வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலத்த காயம்

சங்கரன்கோவில் அருகே வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலத்த காயம்
X

சங்கரன்கோவில் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

சங்கரன்கோவில் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பால்தாய்(60) என்பவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.

சங்கரன்கோவில் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பால்தாய்(60) என்பவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்தாய் என்பவரின் வீட்டில் மேற்கூறிய வழியாக தண்ணீர் வழிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இன்று பால் தாய் வீட்டில் வேலை பார்த்து விட்டு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது அதனால் பால் தாய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பால் வாங்குவதற்கு வந்த சிறுவர் மீதும் மேற்கூரை இடிந்து விழுந்ததால் சிவனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தகவலறிந்த தாலூகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விழுந்த மேற்கூரை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story