/* */

'தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்தது தி.மு.க. ஆட்சி' - கடம்பூர் ராஜூ

தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்த ஆட்சி தி.மு.க. ஆட்சி என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

HIGHLIGHTS

தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்தது தி.மு.க. ஆட்சி - கடம்பூர் ராஜூ
X

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 31வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் அப்பாசாமி, 30வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் தனலட்சுமி, 18வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் பிரதீபா,28வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் மாரீஸ்வரி,29வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சகாதேவன்,ஆகியோரை ஆதரித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டார்.

வீதி வீதியாக சென்று பத்தாண்டு கால சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஒன்றிய குழு தலைவி சத்யா,மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சீனி ராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் துணை சேர்மன் ராமர்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான்,வழக்கறிஞர் பழனிகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜகோபால்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அ.தி.மு.க. பேச்சாளர் மாதாமூர்த்தி, எம்.ஜி.ஆ.ர் இளைஞர் அணி செயலாளர் ஈ.பி.கணேசன்,அ.தி.மு.க. நிர்வாகிகள் கோபி,முருகன்,பழனிகுமார், குழந்தைவேலு,உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில்

தி.மு.க. ஏமாற்றுப் பேர்வழி கட்சி. தலைமை எப்படியோ அதே போலதான் தொண்டர்களும். அது அவர்கள் பழக்கம். வாடிக்கை.ஏமாற்றிய அவர்களுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது.

தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே தவிர 10 மாதத்திற்கு திரும்ப அறிக்கையாக வெளியிட கூடாது. ஆனால் மீண்டும் அறிக்கை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகம் முழுவதும் தி.மு.க.விற்கு எதிர்ப்பு எழுந்து உள்ளதாக அறிக்கை சொல்கிறது. உதயநிதி ,கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினாரை மக்கள் விரட்டி அடித்து வருகின்றனர். விடியல் ஆட்சி என்றால் தி.மு.க. அரசு என்று மக்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை என்றார்.

Updated On: 16 Feb 2022 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...