சங்கரன்கோவில் அருகே கண்மாயில் மீட்கப்பட்ட சடலம்: இன்று அடையாளம் தெரிந்தது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் கிராமத்தில் கண்மாய் பகுதியில் கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம் யார் என்று போலீஸார் இன்றுஅடையாளம் கண்டுபிடித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் ஆசாரி தெருவில் வசிக்கும் செந்தில்குமார் என்பதும் நகை தொழில் செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து நகை வாங்கி வரப் போவதாகவும் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை வீட்டிலிருந்து கிளம்பிய அவர் மலையன்குளம் கண்மாய் பகுதியில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
குறைந்த விலைக்கு நகையை விற்பதாக ஆசைகாட்டி யாரோனும் வரவழைத்து பணத்துக்காக கொலை செய்தார்களா? கொலை செய்த மர்ம நபர்கள் யார் ? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீஸார் இந்த வழக்கை விசாரிக் கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu