கனடா சாலை விபத்தில் தென்காசி மாவட்ட இளைஞர் உயிரிழப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த பிரகாஷ்.
தென்காசி மாவட்டம், வீரசிகாமணி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்-கோமதி தம்பதியரின் மூத்த மகன் சிதம்பரவேல் பிராகாஷ் (வயது.28) இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவியும் ஹிருத்திக் (18 மாதம்) என்ற ஆண்குழந்தையும் உள்ளது.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் கஷ்டபட்டு படித்து, ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்தினரிடம், நான்கு ஆண்டுகள் வெளிநாட்டில் கடுமையாக உழைத்து பணம் சேர்த்து இந்தியா திரும்பி சொந்தமாக விவசாய நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்ய விரும்பியுள்ளார்.
கடந்த நவம்பரில் குடும்பத்துடன் கனடா நாட்டிற்கு பெரும் கனவுடன் சென்ற அவர், கடந்த ஜூலை 3ம் தேதி குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சைக்கிளில் சென்ற போது கார் மோதி விபத்துக்குள்ளனார். அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியத்தவர் 30 வயது மதிக்கத்தக்க பெண், தவறான திசையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு மற்றொரு வாகனத்தையும் இடித்து சென்று தப்பி ஓடிவிட்டார். அந்த மோதலில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட அவர் போலீஸ் காவலில் வைக்கபட்டார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உறவினர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu