தென்காசி மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக தொடங்கியது.

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், கடையம், வாசுதேவநல்லூர்,கீழப்பாவூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 754 வாக்கு பதிவு மையங்களில் இன்று காலை ஏழு மணியில் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுடைய வாக்கினை பதிவு செய்ய ஆர்வமாக வருகின்றனர்.

குறிப்பாக மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 20பஞ்சாயத்து, 12ஒன்றிய கவுன்சிலர்கள், 468வார்டு உறுப்பினர், ஒரு மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 117வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கு ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று டிஎஸ்பிக்கள் உள்பட் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசாம்பவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிறப்பு அதிரடிப்படை மற்றும் ரோந்து வாகனங்களில் அதிகளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!