வள்ளியூரில் கோவில் நிலம் அபகரிப்பு: மீட்டு தர கோரி பாெதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவில் நிலத்தை மீட்டு தர கோரி இந்து அறநிலையத் துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
வள்ளியூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தனி நபர்கள் சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளதால் அதனை மீண்டும் கோவிலுக்கே திரும்பவும் மீட்டுதரும்படி தவத்திரு ஸ்ரீ வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக அளித்துள்ள மனுவில், வள்ளியூர் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் வள்ளியூரை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1244 ஏக்கர் உள்ளது.இவற்றின் மதிப்பு சுமார் 500கோடிக்கும் மேலாகும். இதில் வரும் வருமானத்தினை வைத்து கோவில் நிர்வாகம் மற்றும் தினசரி பூஜைகள் மற்றும் பூசாரிகள் சம்பளம் போன்றவற்றினை கவனித்து கொள்ள வேண்டுமென 1944 மற்றும் 1945 ம் ஆண்டில் கோர்ட் உத்தரவினை வழங்கியுள்ளது.
மேலும் அதனை வள்ளியூர் தவத்திரு ஸ்ரீ வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள் பக்தர்கள் குழுவின் மேற்பார்வையில் அமைந்திட வேண்டுமெனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில தனிநபர்கள் போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் சுமார்50 லட்சத்திற்கும் மேலாக கடன் வாங்கியும் உள்ளனர். இத்தகைய கோவில் சொத்துக்களை அபகரித்து வைத்துள்ள மேற்படி குடும்பத்தாரிடமிருந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலின் சொத்துக்களை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu