தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14 வது மாநில மாநாடு: பல்வேறு கட்சியினருக்கு அழைப்பு
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் கொடுத்து தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆம் மாநில மாநாடு. டிசம்பர்-18, 19, சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை. தென்காசி மாவட்டம் முழுவதும் மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு சென்னையில் வருகிற டிசம்பர் 18 ,19 ஆகிய தேதிகளில் மிக எழுச்சியோடு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேருரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு அழைப்பிதழ்கள் மாவட்ட செயலாளர் க.துரைசிங், மாவட்ட தலைவர் திருமலை முருகன், மாவட்ட துணைத்தலைவர் செ.மைதீன் பட்டாணி, மாவட்ட பொருளாளர் சு.வேல்ராஜன், மாவட்ட இணைச் செயலாளர் P.K.மாடசாமி, மாவட்ட துணைத்தலைவர் B.பாலசுப்பிரமணியன். ஆகியோர் தலைமையில் தென்காசி மாவட்டத்திலுள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது. திமுக தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் கொடுத்து தொடங்கப்பட்டது.
தொடர்ந்து திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்லத்துரை அவர்கள், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் S .பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், வாசு ஒன்றிய பெருந்தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், சங்கரன்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கர பாண்டியன், திமுக நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கை இல.சரவணன், 17 வது வார்டு பிரதிநிதி மார்க்கெட்.VMR.செய்யது அலி, தங்கப்பழம் விவசாய கல்லூரி தாளாளர் முருகேசன், சிவகிரி ஸ்டெல்லா மேரிஸ் கல்வியல் கல்லூரி முதல்வர் முனைவர் ம.நல்லசிவன், சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ந.பழனி செல்வம், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கல்யாணசுந்தரம், திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பொன்னழகன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu