/* */

மாநில மாற்றுத்திறனாளிகள் கைப்பந்துப் போட்டி: கோப்பையை வென்றது கோவை அணி

அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற மாநில மாற்றுத்திறனாளிகள் கைப்பந்து போட்டியில் கோவை அணி கோப்பையை வென்றது.

HIGHLIGHTS

மாநில மாற்றுத்திறனாளிகள் கைப்பந்துப் போட்டி: கோப்பையை வென்றது கோவை அணி
X

கோப்பை மற்றும் ரூ.25 ஆயிரத்தை முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் வழங்கினார். 

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்பள்ளியில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கோவை மாவட்ட அணி ஜோசப் நினைவு வெற்றிக் கோப்பையை தட்டி சென்றது.

கோப்பை மற்றும் ரூ.25 ஆயிரத்தை முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் வழங்கினார். பரிசளிப்பு விழாவுக்கு கேம்பிரிஜ் மெட்ரிக் பள்ளி சேர்மன் ராபர்ட் பெல்லார்மின் வரவேற்றார். இரண்டாம் பரிசு நெல்லை A அணிக்கு பால்துரை நினைவு கோப்பை மற்றும் ரூ 25 ஆயிரத்தை சிவந்திபுரம் தலைவர் ஜெகன் வழங்கினார்.

மூன்றாவது பரிசு நெல்லை B அணிக்கு வெள்ளி கோப்பை மற்றும் ரூ10 ஆயிரம் நெல்லை க்ஷிபா கிளினிக் சார்பில் வழங்கப்பட்டது. 4 வது பரிசு லிண்டா நினைவு கோப்பை மற்றும் ரு3000/- நெல்லை பாரா ஒலிம்பிக் கழகம் சர்பில் தூத்துக்குடி அணிக்கு கிடைத்தது.

பரிசளிப்பு விழாவில் மாநில ஆக்கி தலைவர் சேகர் மனோகரன், தமிழக கால்பந்து கழக துணை தலைவர் சுரேஷ் மனோகரன், விளையாட்டு தந்தை மனோகரன் சாமுவேல் , கணேஷ் குமார் ஆதித்தன், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், விகேபுரம் நகர செயலாளர் கணேசன், கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஷேக் முஜிபுர் ரஹ்மான், மைதீன் பிச்சை, சென்னை சில்க்ஸ் வினித் குமார், 12 மாவட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

மலேசியா சென்று நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்திய கைபந்து வீரர்கள் மாகபுகபகான், பெருமாள் ,முகம்மது ரிஸ்வான் மற்றும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், அனைத்து வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.

Updated On: 14 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது