மாநில தடகளப் போட்டி: பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் தங்கம் வென்று புதிய சாதனை
மாநில தடகளப் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி மாணவ மாணவியர் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
பள்ளிகளுக்கிடையேயான மாநில தடகளப் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி மாணவ மாணவியர் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் என் பி ஆர் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான 35வது தடகளப்போட்டியானது நவம்பர் 7 முதல் 11 வரை நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலபதக்கங்களை பெற்றனர். இதில் 14 வயது பிரிவில் லேனிஷ் ஜேஸ்வா குண்டு எறிதலில் இரண்டாமிடம் பெற்று புதிய சாதனை படைத்தார். மற்றும் சுபின் நந்தா 60 மீட்டர் ஓட்டப்போட்டியில் மூன்றாமிடமும் மரையாத்தலன் போட்டியில் முதலிடமும் பெற்றார். 16 வயது பிரிவில் ஸ்ரீ பாலஜீ குண்டு எறிதலில் முதலிடம் பெற்று புதிய மாநில சாதனை படைத்தார் மற்றும் பால ஜீவா 100 மீட்டர் ஒட்டப்போட்டியில் இரண்டாமிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்றார். விஷ்ணு ஹெக்ஸ்த்தலான் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
16 வயது பெண்கள் பிரிவில் ரின்சிரோஸ் குண்டு எறிதலில் மூன்றாமிடமும் அக்ஷயா ஸ்ரீ தொடர் ஒட்டப்போட்டியில் முதலிடமும், 18 வயது பிரிவில் கார்த்திகா ஈட்டி எறிதலில் முதலிடமும் தனலெட்சுமி 1500மீட்டர் ஒட்டப்போட்டியில் மூன்றாமிடமும் 20 வயது பிரிவில் ஆன்சி பியூலா தொடர் ஒட்டப் போட்டியில் இராண்டாமிடமும் பெற்று பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். சாதனை படைத்த பள்ளி மாணவர்களையும் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களையும், பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன் முதல்வர் சுடலையாண்டிபிள்ளை மற்றும் ஆசிரிய பெருமக்கள் உட்பட பலரை பாராட்டினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu