குடியிருப்புகளை சுற்றி குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்: நோய் பரவும் அபாயம்

குடியிருப்புகளை சுற்றி குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்: நோய் பரவும் அபாயம்
X

சங்கரன்கோவிலில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர்.

சங்கரன்கோவிலில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயாம்.

சங்கரன்கோவிலில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகளை சுற்றி குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயாம். நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழையினால் சங்கரன்கோவில் பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உபரி நீரானது நகர்புறங்களில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளுக்குச் செல்கிறது. இந்நிலையில் சங்கரன்கோவிலில் ரயில்வே ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிகளைச் சுற்றிலும் மழை நீரானது குளம் போல் தேங்கி நிற்பதால் குடியிருப்பு வாசிகள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவுகிறது.

மேலும் தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிறது இதனால் காலரா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்றுமாறு நகராட்சி நிர்வாகத்தினருக்கு குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture