பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7வது நாளாக நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7வது நாளாக நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம்
X

சங்கரன்கோவில் அருகே ஏழாவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே 7வது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே ஏழாவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் பணிபுரிந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த இருபது வருடங்களாக பிடித்த செய்த வருங்கால வைப்புநிதி, பணிகொடை, ஆகியவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஏழாவது நாளாக ஐநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையின் நுழைவு வாயிலில் அமர்ந்து அங்கேயே சமைத்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை தற்போது வரை ஆலை நிர்வாகமோ திருவேங்கடம் வருவாய்துறையை சேர்ந்த அதிகாரிகளோ பேச்சுவார்த்தையில் அழைக்கவில்லை என்பது தொழிலாளர்களின் குற்றசாட்டாகும். எனவே தமிழகஅரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதராத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்