வனவிலங்குகள் வார விழாவையொட்டி பேச்சுப்போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

வனவிலங்குகள் வார விழாவையொட்டி பேச்சுப்போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
X

துண்டு பிரசுரம்.

நெல்லை வனச்சரகம் சார்பில் நடைபெறும் ஆன்லைனில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் வார விழாவை முன்னிட்டு நெல்லை வனச்சரகம் சார்பில் இணையதளம் வழியாக பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..

திருநெல்வேலி வனச்சரகத்தில் உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் வார விழா கொண்டாடப்படுவதை ஒட்டி பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கு வனங்கள் குறித்தும் வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும், வகையில் கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் நடைபெறுகின்றன.

இதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் தங்களுடைய திறமைகளை ஓவியமாக, கட்டுரை அல்லது பேச்சு போட்டி பேசி அதனை கீழ்க்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு 9443792394 அனுப்பும்படி நெல்லை மாவட்ட வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடைசி நாள் 5-10-2021 போட்டியில் சிறந்த முறையில் பங்காற்றிய ஓவியம், பேச்சு, போட்டி கட்டுரை ஆகியவற்றிற்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்