மகாதேவன்குளம் ஊராட்சியில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம்

மகாதேவன்குளம் ஊராட்சியில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம்
X

மகாதேவன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்.

மகாதேவன்குளம் ஊராட்சியில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை பார்க்கும் பயனாளிகளுக்கு சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மகாதேவன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.பிரேம்சிங் தலைமைதாங்கினார்.

ஊராட்சி செயலாளர் ஜெயகண்ணன் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் தணிக்கை குழு அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் ஓவர்சியர் வெண்மதி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகளின் குறைகளை கேட்டு அவர்களுக்கு ஆலோசனை களை வழங்கினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!