மாநில அளவிலான கபடி போட்டியை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்

மாநில அளவிலான கபடி போட்டியை  சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்
X

கபடி வீரர்களுடன் சபாநாயகர் அப்பாவு.

நெல்லை அருகே மாநில அளவிலான கபடி போட்டியை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் சிதம்பரபுரம் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு விவேகானந்தா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 25ஆம் ஆண்டு மாநில அளவிலான கைபந்துபோட்டி மற்றும் 7ம்ஆண்டு கபடி போட்டி சிதம்பரபுரம் இந்து அருள்நெறி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

பின்பு சபாநாயகர் பேசும்போது தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி நடைபெற்றுவருகின்றது. மேலும் தமிழர்களுக்கான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. தொகுதி மக்களின் குடிநீர் தேவைகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதைபோல பெண்களுக்கு விரைவில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைபடுத்தடும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பாஸ்கர் லிங்க சாந்தி, தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் விஜயன், வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!