சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்பு

சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்பு
X
சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.

சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லத்தீஷ். இவருடைய யமஹா பைக்கில் சீட்டுக்கு அடியில் பாம்பு இருப்பதை அறிந்த லத்தீஷ் உடனடியாக சங்கரன்கோவில் உள்ள தனியார் மெக்கானிக் ஷாப்பில் நிறுத்தியுள்ளார். அதிர்ந்துபோன மெக்கானிக் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி சீட்டுக்கு அடியில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரை மணி நேரத்திற்கு மேலாக பாம்பை போராடி மீட்டதனால் தீயணைப்புத் துறையினரை அப்பகுதியில் நின்றவர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்