சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி; சங்கரன்கோவில் பகுதி விவசாயிகள் வேதனை

சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை.
சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் சங்கரன்கோவில் பகுதி விவசாயிகள் வேதனை. தமிழகஅரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, கரிவலம், குருவிகுளம், திருவேங்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐந்தாயிரம் ஏக்கருக்கும் மேலாக சின்ன வெங்காயம் பயிரிட்டனர். தற்போது வெங்காயம் அனைத்தும் அறுவடைக்கு தயாராகி உள்ளதால் அவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விதைக்காக வாங்கும் போது ரூ.80க்கு வாங்கி பயிரிட்டோம். தற்போது சாகுபடி செய்து விற்பனை செய்ய தயராக உள்ள வெங்காயம் 15 முதல் 20 ரூபாய்க்கு வியபாரிகள் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
அதனால் ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு சங்கரன்கோவில் பகுதியில் வெங்காய கொள்முதல் நிலையம் அமைத்து, கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது சங்கரன்கோவில் பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu