திமுக தலைமை அறிவுறுத்தலை ஏற்று சிவகிரி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா

திமுக தலைமை அறிவுறுத்தலை ஏற்று சிவகிரி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா
X

சிவகிரி பேரூராட்சியில் துணைத் தலைவர் விக்னேஷ்.

சிவகிரி பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவியை திமுகவை சேர்ந்த விக்னேஷ் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிவகிரி பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவியை திமுகவை சேர்ந்த விக்னேஷ் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிவகிரி பேரூராட்சியில் துணை தலைவர் பதவியானது திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் அதற்கு மாறாக திமுகவைச் சேர்ந்த 12வது வார்டு கவுன்சிலர் விக்னேஷ் துணைத் தலைவராக பதவி வகித்தார்.

இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் திமுகவினர் வெற்றி பெற்றால் அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக கட்சியினருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சி துணைத் தலைவர் விக்னேஷ் என்பவர் சிவகிரி பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா