சங்கரன்கோவிலில் வியாபாரிகள் ஒருநாள் அடையாள கடையடைப்பு

சங்கரன்கோவிலில் வியாபாரிகள் ஒருநாள் அடையாள கடையடைப்பு
X
சங்கரன்கோவிலில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள BIS ஹால்மார்க் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள BIS ஹால்மார்க் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சங்கரன்கோவில் நகை வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள BIS ஹால்மார்க் நடைமுறையில், ஹால்மார்க் HUID என்ற முறையில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளது.இதானல், HUID முறையில் BIS ஹால்மார்க் வைப்பதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. HUID முறையில் வணிகம் செய்வது சிறுநகை வியாபாரிகளுக்கு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தும் HUID நடைமுறை பயன்படுத்தப்படும் போது சிறு நகை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், HUID முறை நடைமுறைப் படுத்தப்படும் போது அவசர காலங்களில் நகை விற்பனை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு HUID முடிவை திரும்பப் பெற வேண்டும் இல்லையேல் அதில் நகை வியாபாரிகளைக் தகுந்த வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகரில் நகை வியாபாரிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட நகை உற்பத்தியாளர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business