சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் லாரிகளை சிறைபிடித்து  போராட்டம்
X

நெல் கடத்தியதாக சிறைபிடிக்கப்பட்டுள்ள லாரிகள் 

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் கடத்தி வரப்பட்டதாக கூறி லாரியை சிறைபிடித்து 2-வது நாளாக தந்தை-மகள் போராட்டம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 லாரிகளில் உள்ள 30டன் மதிப்புள்ள நெல் மூட்டைகள் அரசுக்கு சொந்தமான கொள்முதல் நிலையங்களில் இருந்து உரிய ஆவணங்களின்றி கடத்தி வரப்பட்டதாக கூறி அந்த லாரியின் முன்பு நின்று இரண்டாவது நாளாக தந்தை இராமச்சந்திரன் மற்றும் மகள் கிருஷ்ண வேணி போராட்டம்.

இரண்டு நாட்களாகியும் உணவுத்துறை அதிகாரிகளோ அல்லது வருவாய்த்துறை அதிகாரிகளும் வராதது சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாகவும், உணவுத்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த நெல் மூட்டைகளை சோதனையிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் இல்லையெனில் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளனர்

Next Story
ai solutions for small business