மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல்: போலீசார் பாதுகாப்பு

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல்: போலீசார் பாதுகாப்பு
X

மேலநீலிதநல்லூர் ஊரட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு வாக்குப்பெட்டிகள்  சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவு வாக்குப்பெட்டிகள் சீல் வைப்பு - போலீசார் தீவிர பாதுகாப்பு

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 117 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வீரசிகாமணி யிலுள்ள தனியார் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டது.

பின்னர் அந்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள அறையில் வைக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சி சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலையில் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!