திசையன்விளையில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

திசையன்விளையில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
X

வாடகை செலுத்தாத கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தபட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திசையன்விளையில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு ஊழியர்கள் சீல் வைத்தனர்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான 24 வணிக வளாக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

வடக்கு பஜார் உடன்குடி சாலையில் அமைந்துள்ள இந்த கடைகள் 2011ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டது. இந்த கடைகளை வாடகைக்கு ஏலம் எடுத்தவர்கள் பத்து வருடமாக வாடகைகளை செலுத்தாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வேண்டுமென்றே தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது.

24 கடைகளுக்கும் சேர்த்து மொத்தம் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி உள்ளது. மேலும் வாடகை பணத்தை வசூல் செய்யும் வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 48 மணி நேர கெடு விதித்து பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது.

இந்நிலையில் கெடு முடிந்த பின்பும் வாடகை கட்டணத்தை கட்டாத கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி கோபால் தலைமையில் கிராம நிர்வாக அதிகாரி செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் துரைசாமி மற்றும் காவல்துறையினர் உதவியுடன் கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தபட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை என்பதாலும் , கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்தைய தினம் என்பதாலும் கடும் கூட்டநெரிசல் மத்தியில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் திசையன்விளை பஜாரில் வியாபாரிகள் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்