சங்கரன்கோவிலில் 12 மணிக்கு மேல் செயல்பட்ட கடைக்கு சீல் வைப்பு!

சங்கரன்கோவிலில் 12 மணிக்கு மேல் செயல்பட்ட கடைக்கு  சீல் வைப்பு!
X

12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளை அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை எடுத்த காட்சி.

சங்கரன்கோவிலில் விதிகளை மீறி பகல் 12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் முறையாக பின்பற்றி வருகிறீர்களாக என மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கோவில் வாசலில் ஸ்விட் கடை முன்பு 12 மணிக்கு மேல் கூட்டமாக டி குடித்தும் கொண்டும் பொருட்கள் வாங்கி சென்று கொண்டு கண்ட மாவட்ட ஆட்சி தலைவர் நகராட்சி அதிகாரிகளை கடைக்கு உடனே சீல் வைக்க சமீரன் உத்தரவிட்டார்.

அதன் பேரில் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்..மேலும் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் நோயாளிகள் இடம் உணவு மற்றும் சிகிச்சை முறைகளை கேட்டு அறிந்த பின்பு கொரோனா கட்டுப்பாட்டு மையத்தையும் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!