மோசமான ரோடு: சங்கரன்கோவில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மோசமான ரோடு: சங்கரன்கோவில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டம் குறித்த சுவரொட்டி. 

சங்கரன்கோவில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக, சாலைகள் தோண்டப்பட்டன. அதன் பணிகள் தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக ஆகியும், ஒரு சில இடங்களில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சில இடங்களில் பணி முடிந்தும் சாலைகள் சரியாக மூடப்படாததால் குண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது.

இதனால், அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை இருக்கும் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர மூடப்படாததால், அவசர ஊர்திகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாக மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சங்கரன்கோவில் பகுதி மக்கள் பலமுறை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்தும் சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனை கண்டித்து, நேற்று எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெடுஞ்சாலைத் துறையை கண்டித்தும், சங்கரன்கோவில் நகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!