சங்கரன்கோவிலில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
X

ஹரிஹரன்.

சங்கரன்கோவிலில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து காெண்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரில் குடியிருந்து வருபவர் முத்துகிருஷ்ணன் இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஹரிஹரன் சங்கரன்கோவிலில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விரக்தியடைந்த மாணவன் ஹரிகரன் நேற்றிரவு தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வெகு நேரமாகியும் அறையைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவைத் திறந்து பார்த்தபோது மாணவன் ஹரிஹரன் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதரி அழுதனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!