சங்கரன்கோவில்: ஆடித்தபசு துவங்கிய நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்தது ஏன்?
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள் ஆலயம் முகப்புத் தோற்றம்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உட்பகுதியில் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவதை அடுத்து செய்தியாளர்களுக்கு கோவில் நிர்வாகம் செய்தி சேகரிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் பத்திரிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், நேற்று கோவிலின் உட்பகுதியில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் சென்ற போது வட்டாட்சியர் அனுமதியுடன் உள்ளே செய்தி சேகரிக்க வரவேண்டும் என கூறினர்.
இதை தொடர்ந்து இன்று காலை வட்டாட்சியரை சந்தித்து அனுமதி பெற்ற பின் மீண்டும் செய்தி சேகரிக்க கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும் கோவில் நிர்வாக ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சங்கரன்கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சகணக்கில் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். தமிழகத்தின் முக்கிய ஆலயமாக விளங்கும் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள் ஆலய திருவிழாக்கள், பூஜை, வழிபாடு செய்திகளை ஊடகத்தின் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்கின்றனர்.
அதுவும் கொரோனா பரவல் காலத்தில் ஆலயத்தில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவுக்கு வர முடியாத பக்தர்கள் ஊடகத்தின் மூலமாக ஆலய நிகழ்வுகளை அறிந்து கொள்ளவதை பெரிதும் விரும்புவார்கள்.
ஆனால் கோவில் நிர்வாகத்தில் பணி செய்பவர்கள், கோவிலை அவர்களின் தனிச்சொத்து போல நினைத்து பத்திரிகையாளர்களை அனுமதி மறுத்து வருவது மிகவும் வேதனையானது. கொரோனா ஊரடங்கு காலத்தில், மக்கள் வராவிட்டாலும் முறையாக நித்தியபூஜைகள், முக்கிய திருவிழாக்கள் நடைபெறுவதை ஊடகத்தின் மூலம் தான் மக்கள் பார்கின்றனர்,
ஊரடங்கு காலத்தில் கோவிலுக்கு வர முடியாவிட்டாலும், ஊடகம் மூலமாக திருவிழாக்களை பார்த்து மக்கள் ஆறுதல் அடைகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்? கோவில் நிர்வாகத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu