வெகு விமர்சையாக நடைபெற்ற சங்கரன்கோவில் தேரோட்டம்
சங்கரன்கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான சங்கரநாராயண சுவாமி ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 48 நாட்கள் திருவிழா நடைபெற்றது
தினந்தோறும் காலை மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான சந்தனம், பன்னீர், நெய், பால், தேன் என பல்வேறு பொருட்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சாமி அம்பாள் வீதி உலா நிகழ்வும் நடைபெற்று வருகிறது
அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு கொடியேற்றப்பட்டு தினந்தோறும் சுவாமி அம்பாள் பல்வேறு சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
மேலும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க சுவாமி அம்பாளை தரிசித்து அருள் பெற்று சென்றனர்.
மேலும் தேரோட்டத்தில் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் விதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 மருத்துவ வாகனம் மற்றும் தீயணைப்புவாகனம் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டியிருந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu