சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் தெப்ப திருவிழா: பக்தர்கள் தரிசனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் தெப்ப திருவிழா: பக்தர்கள் தரிசனம்
X
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள் திருக்கோயில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள் திருக்கோயில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளியன்று தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.

இதனைத் தொடர்ந்து இன்று அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாள் ஆகிய இருவரும் தெப்பத்தில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நகர காவல் ஆய்வாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!