வெளுத்து வாங்கியது மழை - வெள்ளக்காடானது சங்கரன்கோவில்

வெளுத்து வாங்கியது மழை - வெள்ளக்காடானது சங்கரன்கோவில்
X

தாழ்வான பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீரும் கழிவு நீரும். 

சங்கரன்கோவிலில், நள்ளிரவில் பெய்த மழையினால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில், நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, இரயில்வே குடியிருப்பு, ஏவிஆர் காலனி ஆகிய பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து குடியிப்புகளை சூழந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பள்ளி, மருத்துவமனைக்கு செல்வோர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிநீரானது துர்நாற்றம் வீசி வருவதால், தொற்று நோய் பரவும் அச்சம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, நகராட்சி அதிகாரிகள் உட்பட அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், தற்போது வரை கழிவுநீரை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!