சங்கரன்கோவில் அருகே வேட்பாளர்கள் தலைமையில் நல்லிணக்க பொதுக்கூட்டம்

இருமன்குளத்தில், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒன்பது பேர் போட்டியிடுகின்றனர். இதில், இருமன்குளம் கிராமத்தில் மட்டும் ஏழுபேர் போட்டியிடுகின்றனர்.

அங்கு, வேட்பாளர்கள் அனைவரும் எந்தவித விறுப்பு, வெறுப்பின்றி சுமுகமான முறையில் அவரவர்கள் தனித்தனியாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பிரச்சாரம் மேற்கொண்டு, உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், சங்கரன்கோவில் தாலூக காவல் ஆய்வாளர் மீனாட்சிநாதன் தலைமையில், நல்லிணக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ஊர் நாட்டாமை, போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். எந்தவிதமான உதவிகளுக்கும் காவல்துறையினரை அனுக வேண்டும் அதற்கான அத்தனை உதவிகளையும் வழங்குவதற்கு தயராக இருப்பதாக, காவல் ஆய்வாளர் மீனாட்சிநாதன், கிராம மக்களிடம் கூறினார்.

Tags

Next Story
ai marketing future